என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சிலம்பம் போட்டி"
- மண்டல அளவிலான சிலம்பம் போட்டியில் ராமநாதபுரம் மாணவர்கள் சாதனை படைத்தனர்.
- கம்பு சண்டை 14 வயதிற்கு உட்பட்ட பிரிவில் மாணவன் ஷனேல் ஆண்டர்சன் முதல் பரிசு தங்கப்பதக்கம் வென்றார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் அமிர்த வித்யாலயா பள்ளியில் சி.பி.எஸ்.இ. கல்வி துறை, மதுரை சர்வோதய பப்ளிக் குழுமம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான மண்டல அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர். ஒற்றை கம்பு, இரட்டை கம்பு, கம்பு சண்டை ஆகிய பிரிவுகளில் போட்டி நடைபெற்றது. இதில் ராமநாதபுரம் நிக்கோலஸ் சிலம்பம் பயிற்சி பள்ளி மாணவர்கள் இரட்டை கம்பு 14 வயதிற்கு உட்பட்ட பிரிவில் மாணவி பர்ஹத் ஜபீன் முதல் பரிசு தங்கப்பதக்கம் வென்றார். கம்பு சண்டை 14 வயதிற்கு உட்பட்ட பிரிவில் மாணவன் ஷனேல் ஆண்டர்சன் முதல் பரிசு தங்கப்பதக்கம் வென்றார். ஒற்றை கம்பு பிரிவில் 12 மற்றும் 17 வயதிற்கு உட்பட்ட பிரிவில் மாணவர்கள் திவ்யதீக்க்ஷிதா, ஸ்டாண்லி ஆண்டர்சன் இரண்டாம் பரிசு வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை சிலம்பம் மாஸ்டர் மேத்யு இம்மானுவேல் மற்றும் பயிற்சியாளர்கள் திருமுருகன், செல்லபாண்டி பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
- மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் ராமநாதபுரம் மாணவர்கள் சாதனை படைத்தனர்.
- வெற்றி பெற்ற மாணவர்களை பெற்றோர்கள் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
ராமநாதபுரம்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் உலக சிலம்பம் விளையாட்டு சங்கம் சார்பில் மாநில அளவிலான சிலம்பம் போட்டி நடந்தது. ராமநாதபுரம் நிக்கோலஸ் சிலம்பம் பயிற்சி பள்ளி மாணவர்கள் முதல் 3 இடங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.
இப்போட்டியில் சிவகங்கை, மதுரை, திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து சுமார் 1000 பேர் கலந்து கொண்டனர். இதில் ராமநாதபுரத்தில் இருந்து 24 மாணவர்கள் கலந்து கொண்டு 11 தங்கப்பதக்கம், 10 வெள்ளிப்பதக்கம், 3 வெண்கலப்பதக்கம் வென்று ராமநாதபுரம் மாணவர்கள் முதல் 3 இடங்களை பிடித்தனர். சிலம்பம் மாஸ்டர் மேத்யு இம்மானுவேல் உடன் இருந்தார். வெற்றி பெற்ற மாணவர்களை பெற்றோர்கள் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
- காளீஸ்வரி கல்லூரியில் சிலம்பம் போட்டி நடந்தது.
- 500-க்கும் மேற்பட்ட சிலம்ப வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டு திறமைகளை வெளிப்படுத்தினர்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் மாநில அளவிலான சிலம்பம் போட்டிகள் நடைபெற்றது. இதனை உலக சிலம்பம் விளையாட்டு சங்கமும், சிவகாசி ரோட்டரி கிளப்பும் இணைந்து நடத்தின. விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் போட்டியை தொடங்கி வைத்தார். இந்த போட்டிகள் தனி மற்றும் குழு போட்டி களாக நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட சிலம்ப வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமை களை வெளிப்படுத்தினர்.
மேலும் இப்போட்டியில் காளீஸ்வரி கல்லூரி மாண வர்கள் கலந்து கொண்டு ஒற்றை கம்பு, அரை கம்பு, அலங்கார சிலம்பம் ஆகிய பிரிவுகளில் பங்கேற்று பரிசுகள் பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளை கல்லூரி செயலர் செல்வராசன். முதல்வர் பாலமுருகன், துணை முதல்வர் முத்து லட்சுமி ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.
- மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
- வெற்றிபெற்று மற்ற மாணவ மாணவியர்களுக்கு ஊக்கம் அளித்திட வேண்டும் என கூறினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் மாவட்ட அளவில் நடத்தப்பட்ட சிலம்பம் போட்டியில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் தக்ஷிதா, தயனிதா என்ற இரு மாணவிகள் முதலிடம் பெற்று வெற்றி பெற்றுள்ளனர். இவ்விரு மாணவிகளும் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவியர்களை பாரத் கல்வி குழுமங்களின் நிறுவனர் மணி பரிசு வழங்கி பாராட்டி பேசுகையில்:-
நமது தமிழக பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் விளையாடுவதினால் ஏற்படும் நன்மைகளை பற்றி எடுத்துரைத்தார். மேலும் தாங்கள் இருவரும் அழிவின் போக்கில் இருக்கும் சிலம்பம் விளையாட்டை எதிர்வரும் போட்டிகளில் நீங்கள் வெற்றிபெற்று மற்ற மாணவ மாணவியர்களுக்கு ஊக்கம் அளித்திட வேண்டும் என கூறினார். மேலும் வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளியின் தாளாளர் கிருஷ்ணவேணி மணி, செயலர் சந்தோஷ், பள்ளி முதல்வர் விஜயகுமார், துணை முதல்வர் நசீர்பாஷா மற்றும் உடற்கல்வி ஆசிரியர் தமீஸ், ஆகியோர் பாராட்டினர்.
- திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் மாணவர்கள் தங்கம் வென்று சாதனை படைத்தனர்
- இறுதிப் போட்டியில் சென்னை வீரா சாய் சிலம்பம் அசோசியேஷன் சார்பில் தனித்திறமை, தொடும் முறை ஆகிய இரு பிரிவு போட்டிகளில் கலந்து கொண்ட ஹாசினி, அஸ்மிதா ப்ரீத்தி உள்ளிட்ட 5 பேர் தங்கம் வென்றனர்
திருச்சி:
திருச்சி உறையூர் எஸ்.எம்.எஸ்.சி. பள்ளி வளாகத்தில் மாநில அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது. குமரேஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் நடைபெற்ற இந்தப் போட்டியில் தமிழகத்தின் 15 மாவட்டங்களை சேர்ந்த 350 சிலம்ப வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
சென்னை வீரா சாய் சிலம்பம் அசோசியேஷன் ஆசான் சீனிவாசன் தலைமையில் 9 சிலம்பம் வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
5 வயது முதல் 12 வயது வரை ஒரு பிரிவினரும், 13 வயது முதல் 17 வயது வரை ஒரு பிரிவினரும், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஒரு பிரிவும் என மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டது.
இறுதிப் போட்டியில் சென்னை வீரா சாய் சிலம்பம் அசோசியேஷன் சார்பில் தனித்திறமை, தொடும் முறை ஆகிய இரு பிரிவு போட்டிகளில் கலந்து கொண்ட ஹாசினி, அஸ்மிதா ப்ரீத்தி, நந்தன ராஜேஷ், ரித்திகா காந்தி, மாதவன், சண்முக பிரியன், மலரவன், ஷாமினி பிரியா, அர்ச்சனா ஆகியோரில் 5 பேர் முதல் பரிசாக தங்கப்பதக்கம் வென்றனர்.
4 பேர் 2-ம் பரிசாக வெள்ளிப் பதக்கமும், 9 பேர் 3-ம் பரிசாக வெண்கல பதக்கமும் வென்றனர். வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு முன்னாள் எம்.எல்.ஏ. அன்பில் பெரியசாமி பரிசுகள் வழங்கினார்.
சென்னை வீரா சாய் சிலம்பம் அசோசியேசன் ஆசான் சீனிவாசனுக்கு சிறந்த ஆசான் விருது வழங்கப்பட்டது.
- சஞ்சய், சாதனா, கீர்த்தனா வெண்கல பதக்கம் பெற்றனர்.
- வெற்றி பெற்ற குழந்தைகளுக்கும், சிலம்ப பள்ளி நிர்வாகிகளுக்கும், அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
குடிமங்கலம்:
குடிமங்கலம் ஒன்றியம் இலுப்பநகரம் கிராமத்தில், வீரத்தமிழன் சிலம்பாட்ட பள்ளி சார்பில் தன்னார்வ முறையில், குழந்தைகளுக்கு சிலம்பம் கற்பிக்கப்படுகிறது.இப்பயிற்சி பெற்று வரும் கிராம குழந்தைகள், கோவை நேரு தொழில்நுட்ப கல்லூரியில் நடந்த, தென்னிந்திய அளவிலான சிலம்ப போட்டியில் பங்கேற்று அதிக வெற்றிகளை பெற்றுள்ளனர். சபரி, மான்ஷிதா, மகிஷா, வைஸ்ணவ் தங்கப்பதக்கமும், சுவாதி, ஸ்ரீஅகிலன், சர்வேஷ் வெள்ளிப்பதக்கமும், சஞ்சய், சாதனா, கீர்த்தனா வெண்கல பதக்கமும் பெற்றனர்.வெற்றி பெற்ற குழந்தைகளுக்கும், சிலம்ப பள்ளி நிர்வாகிகளுக்கும், அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்